தோட்டத்தில் இருந்து நேரடியாக காய்கறிகள் விற்பனை: E-Vegetailing

  mayuran   | Last Modified : 23 Dec, 2016 01:17 am

சென்னையைச் சேர்ந்த பிரபல முதலீட்டு நிறுவனமான 'தி சென்னை ஏஞ்சல்ஸ்' தங்களது குழுமத்தில் பல முதலீட்டாளர்களையும் வழிக்காட்டிகளையும் கொண்டு, தொழில்முனைவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், முதலீடுகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்தை மையமாக கொண்டு 1.10 கோடி ரூபாய் முதலீட்டில், பண்ணையில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகளை வழங்கும் E-Vegetailing என்ற திட்டத்தை துவங்கினார்கள். தற்போது, ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கிலோ காய்கறிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக E-Vegetailing நிர்வாக இயக்குநர் எட்வின் ராஜ மோகன் தெரிவித்தார். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான காய்கறிகளை வளங்ககூடியதாக உள்ளது, மேலும் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ காய்கறிகளை விநியோகம் செய்வதே எமது நோக்கம் என அவர் கூறினார். http://vegetall.in என்கிற இணையத்தளத்தில் நீங்களும் காய்கறிகளை ஆர்டர் செய்யலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close