தொடரும் Paytm சிக்கல்கள்; வாடிக்கையாளர்கள் அவதி

  shriram   | Last Modified : 22 Dec, 2016 11:12 pm

இந்தியாவின் மிகப்பெரிய இணைய பரிவர்த்தனை மற்றும் E-wallet நிறுவனங்களுள் ஒன்றான Paytm, தற்போது பெரிய தொழில்நுட்ப சிக்கலில் தள்ளாடி வருகிறது. கடந்த சில நாட்களாக பல வாடிக்கையாளர்கள், தங்களிடம் இருந்து அந்நிறுவனம் பணத்தை எடுத்துக் கொள்வதகாகவும், அந்த பணம் சரியாக அவர்களின் Paytm அக்கவுண்டிற்கு வந்து சேருவதில்லை, எனவும் புகார் தெரிவித்து வருகின்றனர். பல வாடிக்கையாளர்கள், தங்களின் பண பேலன்ஸை தவறாக காட்டுவதாகவும் கூறுகின்றனர். மேலும், Paytm-இன் இணைய புகார் தெரிவிக்கும் வசதியால் எந்த பலனும் இல்லை, என்றும் கூறுகின்றனர். தற்போது ரூபாய் நோட்டு தடையை தொடர்ந்து பண தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், அரசு மக்களை காசில்லா பரிவர்த்தனைகள் செய்ய அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் Paytm போன்ற நிறுவனங்கள் பணத்தை எடுக்கும்போது, பரிவர்த்தனை பாதியிலேயே ரத்தானால், இரு தினங்களுக்கு பின் தான் பணம் திரும்ப கிடைக்கும். இது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால், எப்போதும் போல இயங்கி வருவதாகவும், தற்போது வங்கி இணையதளங்களை பலர் உபயோகப்படுத்துவதால் சிறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும் Paytm தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close