10 கோடி வாடிக்கையாளர்களை நெருங்குகிறது ஜியோ!

  shriram   | Last Modified : 24 Dec, 2016 11:38 am

தொலைத்தொடர்புத் துறையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, இன்னும் 3 மாதங்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை தொடும், என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் நிதின் சோனி தெரிவித்துள்ளார். தற்போது அந்நிறுவனம் கிட்டத்தட்ட 5.5 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அதன் இலக்கு 10 கோடி பேர் என அம்பானி கூறியிருந்தார். இலவச கால், எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் சேவைகள், மார்ச் மாதம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. ஆனால், "இது இலவச சேவைக்கான மக்களின் ஈடுபாடு தான். பலர் மற்ற நெட்வர்க்குகளின் சிம்மை வைத்துக்கொண்டே ரிலைன்ஸ் ஜியோவை இலவச சேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள். இந்த இலவச சேவை முடிந்தபின் பல வாடிக்கையாளர்கள் ஜியோவிடம் இருந்து விலகுவார்கள் என நினைக்கிறேன். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் 5 முதல் 10 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றார் நிதின்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close