ரூ.100 க்கு பதில் ரூ.500 தந்த ATM

  mayuran   | Last Modified : 26 Dec, 2016 06:04 pm

ஐதராபாத், ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கோட்டக் மஹிந்திரா வங்கியின், ATM இல் 100 ரூபாய்க்கு பதிலாக, 500 ரூபாய் நோட்டு வந்துள்ளது. ஒருவர் 2500 ரூபாய் எடுத்த போது 2000 ரூபாய் நோட்டும் 500 ரூபாய் நோட்டுகள் ஐந்தும் வந்துள்ளது. அவரது கணக்கில் இருந்து 2500 ரூபாய் டெபிட் ஆகியுள்ளது. ஆனால் அவர் கையிலோ மொத்தமாக 4500 ரூபாய் கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த மக்கள் அந்த ATM முன் நீண்ட வரிசையில் குவிந்துள்ளனர். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து ATM வங்கி அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் வங்கிக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close