சாம்சங் 'கேலக்சி 8'ல் 8 ஜிபி ரேம்??

  shriram   | Last Modified : 28 Dec, 2016 10:14 am

2016 சாம்சங் நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு வருடமாக தான் பார்க்கப்படும். பயங்கர எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான 'கேலக்சி நோட் 7' மொபைலை தன்னுடைய சிறந்த போன் என விளம்பரப்படுத்தியது. ஆனால், அந்நிறுவனத்தின் போதாத காலம், நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் போனின் பேட்டரி வெடிக்கிறது என குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் முழித்த சாம்சங், அனைத்து நோட் 7 போன்களையும் திரும்ப வாங்கியது. இதனால் பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது தன் பெயரை, 'கேலக்சி 8' மூலம் ரிப்பேர் செய்ய முயன்றுவருகிறது. கடைசியாக வெளியாகியுள்ள செய்தியில் அந்த போனை 8 ஜிபி ரேம் கொண்டு வடிவமைக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும் 6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அடுத்த வருடம் இந்த போன் மட்டுமல்லாமல், கேலக்சி S8 Plus என இன்னொரு மாடலையும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close