ரிலையன்ஸ் ஜியோக்கு எதிராக டிராய் போர்க்கொடி

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஜியோ தொலைதொடர்பு சேவை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டு, 3 மாதங்கள் கட்டணமற்ற இலவச அழைப்பு மற்றும் டேட்டா உள்ளிட்டவற்றை சிறப்பு சலுகையாக அறிவித்தது. இந்த சலுகை இம்மாதத்துடன் முடிவடையவிருந்த நிலையில், 'ஹாப்பி நியூயர்' என்ற பெயரின் மூலம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை இச்சலுகையை நீட்டிப்பதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த ஒன்றாம் தேதி அறிவித்தார். இதுகுறித்து டிராய், அறிமுக இலவச சலுகைகளை 90 நாட்களுக்கு வரை மட்டுமே நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 90 நாட்கள் சலுகை நீட்டிக்கப்பட்டிருப்பது விதிகளை மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஜியோவின் இலவச சலுகை நீட்டிப்பானது விதிமீறல் இல்லை என ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்திருப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் டிராய் கேட்டுக்கொண்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close