2016-ல் மூடு விழா கண்ட 212 புதிய தொழில் நிறுவனங்கள்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

புதிய தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 2014-ம் ஆண்டிற்கு பிறகு துவங்கப்பட்ட புதிய தொழில் நிறுவனங்களில் 212 நிறுவனங்கள் இந்த வருடம் மூடப் பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 50% அதிகமாகும். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிறந்த 10 புதிய தொழில் நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் போதிய அளவு நிதி திரட்டிய பின்னரும் கூட மூடப் பட்டன. பெப்பர்டேப் எனும் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 347 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டிய பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் மூடப் பட்டது. இதேபோல் Parcelled, Doormint மற்றும் Buildzar போன்ற நிறுவனங்களும் இந்த ஆண்டு மூடப் பட்டன. போதிய நிதி இல்லாதது, நிறுவனங்களின் செயல்பாடு திறன் குறைவு, மற்றும் முதலீட்டாளர்களின் அழுத்தத்தின் காரணமாக பெரும்பான்மையான நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close