• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

"Lyf Water 3" ரிலையன்ஸின் புதிய அறிமுகம்

Last Modified : 28 Dec, 2016 01:08 pm

ரிலையன்ஸ் நிறுவனம் lyf போன்களின் வரிசையில் புதிதாக Lyf Water 3 எனும் போனை அறிமுகப்படுத்தி உள்ளது. பட்ஜெட் விலையில் வந்துள்ள 4ஜி ரக போனான இது சில்வர் வண்ணத்துடன், 5.5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு 5.0 இயங்குதளம், 1.5GHz octa-core Qualcomm Snapdragon 615 MSM8939 SoC உடன் கூடிய 2ஜிபி RAM, ஆட்டோபோகஸ் மற்றும் பிளாஷ் உடன் கூடிய 13 மெகாபிக்சல் திறன் கொண்ட பின்பக்க கேமரா, 5 மெகாபிக்சல் திறன் கொண்ட முன்பக்க கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த மொபைலில் 32ஜிபி அளவுள்ள எக்ஸ்டெர்னல் மெமரி கார்டு வரை பயன்படுத்தலாம். ஹைபிரிட் டூயல் சிம் வசதி கொண்ட இதில் ஒரு சிம் 4ஜி வசதியும் மற்றொன்று 2ஜி வசதியும் உடையவை. சிறப்பாக ரிலையன்ஸின் "ஹாப்பி நியூ இயர்" ஆஃபருடன், 3000mAh பேட்டரி, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS, Micro-USB, ambient light sensor, proximity sensor, digital compass, accelerometer போன்றவையும் இந்த போனில் உள்ளன. ரூ.6,599 விலையில் ப்ளிப்கார்ட்டில் இம்மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.

Advertisement:
[X] Close