2000 ரூபாய் நோட்டை தொடர்ந்து ஸ்னாப்டீலில் Jio சிம் டோர் டெலிவரி

  mayuran   | Last Modified : 28 Dec, 2016 07:14 pm

அண்மையில் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடை முன்னிட்டு 2000 ரூபாய் நோட்டை ஸ்னாப்டீல், டோர் டெலிவரி செய்தது. தற்போது Jio சிம்மை 'Happy New Year' ஆஃபர் உடன் ஸ்னாப்டீல் மூலமாக ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்டர் செய்ததும் பதிவு செய்யப்பட்ட மொபைல் இலக்கத்திற்கு டெலிவரி செய்யப்படும் நேரம் குறித்தும் ஆதார் எண்ணை பதிவு செய்வது குறித்தும் SMS கிடைக்கும். அதன் மூலம் ஆதார் எண் வழங்கியதும் Jio சிம்மை டெலிவரி செய்பவரே ஆக்டிவேட் செய்து கொடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த வசதி மூலம் Jio சிம்மை அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, டெல்லி, ஐதராபாத், ஜெய்பூர், கொல்கத்தா, மும்பை, பூனே மற்றும் விசாகபட்டினம் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close