'Sell as Individual' பழைய பொருள் விற்பனைக்கு 'அமேசானின்' புது சேவை

Last Modified : 29 Dec, 2016 04:09 pm

உங்களிடம் உள்ள பழைய பொருட்களை விற்பனை செய்வதற்காக 'Sell as Individual' எனும் சேவையை அமேசான் இந்தியா துவங்கி உள்ளது. அமேசான் இணையதளத்தில் உள்ள Sell as Individual பக்கத்திற்கு சென்று நீங்கள் விற்பனை செய்ய நினைக்கும் பொருளின் தகவல்கள், புகைப்படம் மற்றும் விலையை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். பொருளை வாங்க விரும்புபவர்கள் அமேசானில் பொருளை வாங்கியதும் உங்களுக்கு இமெயிலில் தகவல் வந்து விடும். பின்னர் அமேசான் பணியாளர் உங்கள் வீட்டிற்கு வந்து பொருளை எடுத்து சென்று சம்பந்த பட்டவர்களிடம் ஒப்படைத்து விடுவார். டெலிவரி ஆன பிறகு சேவை கட்டணமாக சிறிய தொகையை வசூலித்து விட்டு மீதி தொகையை அமேசான் உங்கள் கணக்கிற்கு அனுப்பி விடும். ஒருவேளை வாங்கியவர்களுக்கு பொருள் பிடிக்காமல் திருப்பி அனுப்பி விட்டாலும் அமேசான் எந்த கட்டணமும் வசூலிக்காமல் மீண்டும் பொருளை உங்களிடம் ஒப்படைத்து விடும். இந்த சேவையானது தற்போது பெங்களூர் நகரில் மட்டும் வழங்கப் படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close