பெங்களூரில் வருகிறது ஆப்பிள் தொழிற்சாலை!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அடுத்த வருடம் முதல் பெங்களூரில் ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஐபோன் தயாரிப்பில் ஆப்பிளின் இணை நிறுவனமான விஸ்டரான், பெங்களூரு அருகே உள்ள பீன்யா என்கிற தொழிற்சாலை பகுதியில் ஒரு பேக்ட்ரியை தயார் செய்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் ஐபோன் பாகங்களை இங்கு வைத்து இணைத்து விற்பனைக்கு அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆப்பிள் நிறுவனம் பெங்களூரில் இரண்டு வேலைகளுக்கு விளம்பரம் கொடுத்துள்ளது. 2017 முதல் இந்த தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக், இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது முதல் அந்நிறுவனம் இந்திய மார்க்கெட்டை பெரிதாக குறிவைத்துள்ளது. தொழிற்சாலைகள் துவங்க இந்தியா அரசிடம் அந்நிறுவனம் மானியங்கள் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close