விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்தியது "இண்டிகோ"

  gobinath   | Last Modified : 31 Dec, 2016 04:28 pm

குறைந்த விலையில் உள்நாட்டு விமான சேவைகளை வழங்கி வரும் :இண்டிகோ" விமான நிறுவனம், தனது விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்போவதாகவும், அதன் மூலம் புதிய 10 வழிகளில் விமான சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. "இண்டிகோ" விமான நிறுவனம் தனது உள்நாட்டு சேவையை தொடங்கி 125 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் விமானங்களின் எண்ணிக்கையும் 125 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், தற்போதுள்ள வழித்தடங்களில் மேலும் சில புதிய சேவைகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள "இண்டிகோ" விமான நிறுவனம், ஹைதராபாத்தில் இருந்து கோவா, கோயம்புத்தூர் , புவனேஸ்வர் மற்றும் விசாகப்பட்டினத்துக்கு புதிய சேவைகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த சேவைகள் வரும் ஜன . 1. 2017 இல் இருந்து தொடங்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close