மும்பையில் விற்பனைக்கு வந்தது சிஎன்ஜி ஸ்கூட்டர்கள்

  mayuran   | Last Modified : 03 Jan, 2017 11:42 pm

இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் (CNG) ஸ்கூட்டர் மாடல்களை Eco Fuel மற்றும் Mahanagar Gas நிறுவனமும் இணைந்து மும்பையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 60 பைசா செலவில் ஒரு கிலோமீட்டர் தூரம் சிஎன்ஜி ஸ்கூட்டர்களில் பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக 18 ஸ்கூட்டர் மாடல்களுக்கு இந்திய iCAT மையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட உள்ள இரண்டு சிஎன்ஜி சிலிண்டர்களும் 1.2 கிலோ எடை கொண்டதாகும். முழுமையாக சிஎன்ஜி நிரம்பி இரு சிலிண்டர்களும் இணைந்து 110 முதல் 120 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் செலவை விட மிக குறைவான விலையில் இது இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. சிஎன்ஜி மையங்களை கண்டறிய எம்ஜிஎல் புதிய ஆப் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. சிஎன்ஜி சிலிண்டர்கள் பொருத்த அனுமதி பெற்ற 18 ஸ்கூட்டர்கள் விபரம் பின்வருமாறு.. * ஹீரோ டூயட் * டிவிஎஸ் ஜூபிடர் * ஹீரோ மேஸ்ட்ரோ * டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் * ஹிரோ பிளஸர் * டிவிஎஸ் வீகோ * ஹோண்டா ஆக்டிவா 125 * வெஸ்பா 125 * ஹோண்டா டியோ * யமஹாஆல்ஃபா * மஹிந்திரா டியூரோ DZ * யமஹா ஃபேசினோ * மஹிந்திரா கஸ்ட்டோ * யமஹா ரே * மஹிந்திரா கஸ்ட்டோ 125 * சுஸூகி ஆக்செஸ் * சுஸூகி லெட்ஸ் * சுஸூகி ஸ்விஷ் பட்டியல் படுத்தப்பட்ட ஸ்கூட்டர் நீங்க மாற்ற விரும்பினால் ரூ.15,000 பெறுமதி உள்ள சிஎன்ஜி கிட்டை வாங்கி பொருத்திக் கொள்ளாலாம். இதனை பொருத்த குறைந்தது மூன்று மணிநேரம் போதுமானது என கூறப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close