மாதம்தோறும் இலவச 3ஜிபி 4ஜி டேட்டா - ஏர்டெல் அதிரடி

Last Modified : 04 Jan, 2017 11:14 am

ஏர்டெல் நிறுவனம் மாதம்தோறும் (ஒரு வருடத்திற்கு) 3ஜிபி 4ஜி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டமானது ஏர்டெல் 4ஜி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமில்லாது புதிதாக ஏர்டெல் 4ஜி இணைப்பு பெறுபவர்கள் மற்றும் புதிதாக 4ஜி போன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் வழங்கப் பட உள்ளது. இன்று ஆரம்பிக்கும் இந்த திட்டமானது அடுத்த மாதம் 28-ம் தேதி வரை வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில் சேரும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் 345 ரூபாய் 1ஜிபி 4ஜி டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும் பின்னர் மை ஏர்டெல் ஆப் மூலமாக இலவச 3ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த இலவச ஆஃபர் 13 டேட்டா ரீசார்ஜ்களுக்கு மட்டுமே கிடைக்கும் அதுவும் டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே. இதேபோல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒரு MyPlan Infinity Plans திட்டத்தை subscribe செய்வதன் மூலம் இந்த இலவச 3ஜிபி 4ஜி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம். வேகமாக வளர்ந்து வரும் 4ஜி நெட்வெர்க்கில் உள்ள தொழில் போட்டியை சமாளிக்கவே இந்த திட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close