Telegram-ன் புதிய அப்டேட்

Last Modified : 05 Jan, 2017 10:50 pm

மெசேஜிங் ஆப்பான Telegram புது அப்டேட்டை( v.3.16) வெளியிட்டுள்ளது. இந்த புது அப்டேட்டில், அனுப்பட்ட மெசேஜ்களை 48 மணி நேரத்தில் திரும்ப பெரும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் Telegram-ஐ பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே மற்றொரு ஆப்-ஐ பயன்படுத்த நேர்ந்தால் கடைசியாக எந்த இடத்தில் scroll செய்து வைத்தோமோ அதே இடத்தில் இருந்து தகவலை காட்டும் வசதியும் உள்ளது. எவ்வளவு டேட்டா செலவு செய்துள்ளோம் என்பதை காண Network Usage section, ஆண்ட்ராய்டு போன்களில் Gboard keyboard மூலம் GIFs அனுப்பும் வசதி போன்றவையும் சேர்க்கப் பட்டுள்ளது. புதிய எமோஜிகளையும் ஆண்ட்ராய்டு அப்டேட்டில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளம் கொண்ட மொபைல் வைத்துள்ள Telegram பயனாளர்களுக்காக fast action menu எனும் எளிதில் சாட் செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. மேலும் ஷேர் ஆப்ஷனை கிளிக் செய்யும் போது அதில் சமீபத்தில் டவுன்லோடு செய்தவற்றை காட்டும் விதமாக இந்த நியூ அப்டேட் வடிவமைக்கப் பட்டுள்ளது.

Advertisement:
[X] Close