• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

ரயில் கட்டணத்தில் விமான பயணம்

  gobinath   | Last Modified : 06 Jan, 2017 02:57 pm

ஏர் இந்தியா விமான நிறுவனம், உள்நாட்டு பயணிகளுக்கு, ரூ. 1080க்கு விமான பயணம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை உள்நாட்டில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், இந்த சிறப்பு சலுகை மூலம் பயணம் செய்யலாம் என்றும், இதற்கான முன்பதிவு இன்று முதல் ( 06/01) 10 ஆம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், இரண்டாவது ஏசி-யில் பயணிக்கும் கட்டணத்துக்கு இணையாக இந்த விமானக் கட்டணம் இருப்பதால், அனைவருக்கும் இது வரப்பிரசாதமாக அமையும் என தெரிகிறது. மேலும், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க முடியாதவர்கள், ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு "சூப்பர் பேர்ஸ்" என்ற திட்டத்தின் கீழ், டிக்கெட் பெற்று ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement:
[X] Close