ஆப்பிள் மூலம் 2 ஆயிரம் கோடி டாலர்கள் வருமானம்!!

  gobinath   | Last Modified : 06 Jan, 2017 08:12 pm

"ஆப்பிள்" நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2016ல், ஆப் மூலமாக, அதனை உருவாக்கியவர்கள் 2 ஆயிரம் கோடி டாலர்கள் வரை சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், கடந்த புது வருடத்தில் அன்று மட்டும் சுமார் 24 கோடி அமெரிக்க டாலர்களுக்கு ஆப்- கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆப் ஸ்டோர் நிறுவப்பட்டதில் இருந்து, இதுவரை சுமார் 6 ஆயிரம் கோடி டாலர்கள் வரை விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம், பல்வேறு வகையான ஆப்-களை தயாரித்த அனைவருக்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் "ஆப் ஸ்டோர்" 155 நாடுகளில் கிடைக்க கூடியதாக இருப்பதாகவும், அதில், தற்போது வரை சுமார் 22 லட்சம் ஆப்-கள் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனிடையே, "சூப்பர் மரியோ ரன் " என்ற ஆப் - ஐ, அது வெளிவந்த 4 நாட்களில், சுமார் 4 கோடி பேர் டவுன்லோட் செய்துள்ளதாக கூறியுள்ள ஆப்பிள் நிறுவனம், இதுவரை டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்-களில் "போகிமான் கோ" தான் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close