2017-ல் சரியும் இந்திய பொருளாதாரம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

வரும் நிதியாண்டியில் இந்தியாவின் பொருளாதாரம் சற்று சரிவை சந்திக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய புள்ளியில் அலுவலகம் நடத்திய ஆய்வின் முடிவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரும் நிதியாண்டில் 7.1% மட்டுமே வளர்ச்சியைக் காணும் என தெரிவித்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளை காட்டிலும் மிக குறைந்த வளர்ச்சியாகும். இந்த சரிவிற்கு பிரதமரின் செல்லா நோட்டு அறிவிப்பு காரணமில்லை என்றும், புள்ளிவிரங்கள் நவம்பர் மாதத்திற்கு முன்னுள்ள தகவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த பொருளாதாரமானது 6.8% அளவிற்கே வளர்ச்சி காணும் என ப்ளூம்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. விவசாயம், மீன் பிடி துறை போன்றவற்றின் வளர்ச்சி 4.1%-ஆக உயர்ந்தாலும், உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகளின் வளர்ச்சி 7.4% மற்றும் 2.9%-ஆக குறையும். இதேபோல் சுரங்க துறையின் வளர்ச்சி 1.8% குறையும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது உள்ள தரவுகளை மறுஆய்வு செய்து மீண்டும் பிப்ரவரி மாதம் புதிய அறிக்கை ஒன்றை மத்திய புள்ளியில் அலுவலகம் தாக்கல் செய்ய உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close