இனிமேல் யாஹூ கிடையாது?!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

புகழ் பெற்ற யாஹூ நிறுவனம் கடந்த ஆண்டு 4.83 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வெரிசோனா நிறுவனத்திற்கு விற்கப் பட்டது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் பெயரை Altaba Inc என மாற்றம் செய்துள்ளனர். இதையடுத்து யாஹூவின் தலைமை செயல் இயக்குனராக இருந்த மரிசா மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். யாஹூ இணைதளத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக, கோடி கணக்கான பயனாளர்களின் தகவல்கள் திருடு போன சம்பவம், யாஹூ - வெரிசோனா இடையேயான விற்பனை விவகாரத்தில் சிக்கலை உருவாக்கியது. தகவல் திருடு போனது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், விற்பனை ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்குள் அனைத்தையும் சரி செய்து விடுவோம் என வெரிசோனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெரிசோனா - யாஹூ இடையேயான ஒப்பந்தம் முடிவுக்கு வரும் போது மேலும் 5 யாஹூ இயக்குனர்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என தெரியவந்துள்ளது. Altaba Inc என பெயர் மாற்றம் பெற்றுள்ள இந்நிறுவனத்திற்கு Eric Brandt-ஐ புதிய தலைவராக நியமித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close