ஆசியாவிலேயே மோசமான விமான சேவை பட்டியலில் ஏர்இந்தியா

  mayuran   | Last Modified : 10 Jan, 2017 11:22 pm

ஆசிய பசிபிக் பகுதிகளில் விமான கால அட்டவணையை சரியாக பின்பற்றும் விமான நிறுவனங்கள் குறித்து Global Airlines OTP ஆய்வு செய்தது. இதில் இந்திய நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ 7, 10 வது இடத்தை பிடித்துள்ளன. OTP ஆய்வில் 87.33 சதவீதம் பெற்று முதலிடத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் உள்ளது. அதேவேளை மோசமான விமான சேவையை வழங்கும் தரவரிசை பட்டியலில் இந்திய அரசால் இயக்கப்படும் ஏர்இந்தியா விமான சேவை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து ஏர்இந்தியா செய்தித்தொடர்பாளர் தனஞ்செயன் குமார், "இந்த ஆய்வு ஏற்றுக்கொள்ள முடியாது, எங்களின் விமான சேவை குறித்த அனைத்து விபரங்களும் எங்களிடம் உள்ளது, நாங்கள் சரியான கால அட்டவணையை பின்பற்றுகிறோம்" என கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close