HDFC வங்கிகளில் இனி ரோபோ சேவை

  mayuran   | Last Modified : 10 Jan, 2017 11:20 pm

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்துக்குப் பிறகு மக்கள் வங்கிகளுக்கு செல்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாமர மக்களுக்கு வங்கிகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகள் குறித்து தெரியாததால் குழப்பம் அடைந்து வருகின்றனர். இதனை சீர் செய்யும் வகையில் HDFC வங்கி மனிதனைப் போல் ஒரு ரோபோட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோ, வாடிக்கையாளர்கள் வங்கி குறித்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, ATM பின் மாற்றுதல், ரீச்சார்ஜ், பணம் அனுப்புதல், பில் கட்டுதல் என பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சிட்டி யூனியன் வங்கி, தனது சென்னை கிளையில், லட்சுமி என்ற பெயரில் இதே போன்ற ஒரு ரோபோவை அறிமுகம் செய்தது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close