இரு RAM ரகங்களில் வெளிவந்துள்ள Lenovo P2

Last Modified : 01 Jan, 1970 05:30 am

3ஜிபி மற்றும் 4ஜிபி RAM ரகங்களில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை லெனோவா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. Lenovo P2 எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த மொபைலானது Champagne Gold மற்றும் Graphite Grey வண்ணங்களில் வெளிவந்துள்ளது. 2.5D கொரில்லா கிளாஸ் உடன் கூடிய 5.5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 128 ஜிபி எக்ஸ்டெர்னல் மெமரி, 13 மெகா பிக்சல் ரியர் கேமரா, 5 மெகா பிக்சல் ப்ரண்ட் கேமரா, டூயல் நேனோ சிம், 5100mAh பேட்டரி, 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.1, FM radio போன்றவற்றை கொண்டுள்ளது. இதன் சார்ஜ் ஏற்றும் திறனானது Quick Charge 3.0-வை விட 30% வேகமானது. பிங்கர் பிரிண்ட் சென்சார், Dual Apps mode போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. 3 ஜிபி RAM கொண்ட மொபைலின் விலை 16,999 ரூபாயாகவும், 4 ஜிபி RAM கொண்ட மொபைலின் விலை 17,999 ரூபாயாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close