ஐடியா வழங்கும் இலவச 3ஜிபி 4ஜி டேட்டா

Last Modified : 12 Jan, 2017 02:51 pm

4ஜி வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய திட்டம் ஒன்றை ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி புதிதாக 4ஜி போன் வாங்கும் ஐடியா வாடிக்கையாளர்கள் வழக்கமான 348 ரூபாய் 4ஜி டேட்டா பேக் (ப்ரீபெய்ட்) ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 3ஜிபி இலவச டேட்டா வழங்கப்படும். 28 நாள் வேலிடிட்டி கொண்ட இந்த ஆஃபரை ஒரு வருடத்திற்கு 13 முறை பயன்படுத்தலாம். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் 499 ரூபாய் பேக் பெற்றுக் கொண்டால், அன்லிமிடெட் லோக்கல், நேஷனல் மற்றும் இன்கமிங் ரோமிங் கால்களுடன் 4ஜி போன் வைத்திருப்போருக்கு 3ஜிபி டேட்டாவும், மற்றவர்களுக்கு 1ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். இதேபோல் 999 ரூபாய் பேக்கை பெற்றால், 499 ரூபாய்க்கான சேவைகளுடன், அன்லிமிடெட் நேஷனல் ரோமிங் கால்களும், 4ஜி வாடிக்கையாளர்களுக்கு 8ஜிபி டேட்டாவும், மற்றவர்களுக்கு 5ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இவற்றுடன் சேர்த்து மேற்படி கூறிய கூடுதல் 3ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close