உலக பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக உயரும்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்த ஆண்டில் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை உலக வங்கி கணித்துள்ளது. அந்தவகையில் வர்த்தக தேக்கம், அடக்கமான முதலீடுகள் மற்றும் உச்சபட்ச கொள்கை நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களால் உலக பொருளாதாரத்துக்கு கடினமானதாக 2017 ஆம் ஆண்டு அமையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. ஆயினும் பல ஆண்டு ஏமாற்றத்துக்குப்பின் 2017 இல் உறுதியான பொருளாதார வாய்ப்புகள் தென்படுவதாக உலக வங்கி தலைவர் ஜிங் யாங் கிம் கூறியுள்ளார். இதன்மூலம் உலக பொருளாதாரம் 2.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை செயல்படுத்தியதால், கடந்த 2016-ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதால், 2016-17-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என கூறப்படுகிறது. எனினும் இது வருகிற ஆண்டுகளில் 7.8 சதவீதம் வரை உயரக்கூடும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close