1 லட்சம் புதிய வேலை வாய்ப்பு: அமேசான் அறிவிப்பு

  gobinath   | Last Modified : 13 Jan, 2017 01:12 pm

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனம், வரும் 18 மாதத்தில் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தில் தற்போது சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ஊழியர்கள் முழு நேர பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் புதிதாக ஒரு லட்சம் முழு நேர ஊழியர்கள் வரும் 2018 மத்தியில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தை விட, மூன்றாவது காலாண்டில் அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்து காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close