விரைவில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 3,050 கோடி அபராதம்

  mayuran   | Last Modified : 13 Jan, 2017 01:57 pm

ஜியோ வாடிக்கையாளர்கள், மற்ற மற்ற தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் எண்ணை தொடர்பு கொள்ளும்போது, சரியான இணைப்பு வழங்கவில்லை என ஜியோ நிறுவனம் இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் செய்தது. இது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தை தொலைத் தொடர்பு துறை கேட்டது. அதை ஆராய்ந்த தலைமை வழக்கறிஞர், சேவை குறைபாட்டில் ஈடுபட்ட ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கும் மொத்தம் 3,050 கோடி ரூபாய் அபராதம் விதிக்க தொலைத் தொடர்பு துறைக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்திருந்தார். எனவே, இதுதொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
[X] Close