அதிகாரப் பூர்வ அறிவிப்புக்கு முன் " லீக்" ஆன NOKIA 8 - ன் சிறப்பம்சங்கள்

  jerome   | Last Modified : 13 Jan, 2017 04:21 pm

மொபைல் போன் சந்தையில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய நிறுவனம் நோக்கியா. ஆனால், அடுத்தடுத்து வந்த ஆண்ட்ராய்டு மொபைல் கம்பெனிகளின் அணிவகுப்பால் நோக்கியாவிற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள Nokia 8 flagship எனும் தன் புது தயாரிப்பை பிப்ரவரி 26- ஆம் தேதி, பார்சிலோனா மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்க காத்திருந்தது. ஆனால், Nokia 8 flagship- மொபைலின் சிறப்பம்சங்கள் இப்பொழுதே வெளிவந்து விட்டன. இரண்டு வகையான விலைகளில் இந்த மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. அதிக விலையுடைய மாடலில் Qualcomm Snapdragon 835 processor மற்றும் 6GB RAM உள்ளது. Carl Zeiss lens- உடன் கூடிய 24-megapixel பின் பக்க கேமராவும், 12-megapixel உடன் முன் பக்க கேமராவும் இருக்கின்றது. குறைந்த விலையுடைய மாடலில் Qualcomm Snapdragon 821 processor மற்றும் 4GB RAM உடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. மற்ற அம்சங்கள் அனைத்தும் நோக்கியாவின் முந்தையை மாடலான Lumia 1020 -யைப் போன்றே உள்ளது. internal storage - ல் 32 GB மற்றும் 64 GB அல்லது 128 GB என இரண்டு மாடல்களிலும் வித்தியாசங்கள் உள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close