உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் திரை

Last Modified : 14 Jan, 2017 06:13 pm

பிலிப்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 40 இன்ச் அளவு கொண்ட 4K கம்ப்யூட்டர் மானிட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மானிட்டர் 10-பிட் பேனல் மற்றும் 3840x2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் அறிமுகம் செய்துள்ள இந்த மானிட்டர் BDM4037UW என பெயரிடப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பிக்சல் அமைப்பு தொழில்நுட்பம் 178/178 கோணத்திலும் பார்க்கும் வசதியை வழங்குகிறது. அல்ட்ரா வைடு கலர் மற்றும் 85% NTSC அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மல்டி வியூ அம்சம் மூலம் நான்கு இன்புட்களை வழங்கி அனைத்திலும் ஃபுல் எச்டி தரத்தில் பயன்படுத்த முடியும். இதில் புகைப்படங்களை வரிசைப்படுத்த இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை VGA, டிஸ்ப்ளேபோர்ட் x 2, எச்டிஎம்ஐ 1.4 - MHL x1, HDMI 2.0 – MHL x1, யுஎஸ்பி 3.0x4, ஹெட்போன் அவுட் மற்றும் 5 வாட் பில்ட் இன் ஸ்பீக்கர் உள்ளிட்டவையும் உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close