மாருதி இக்னிஸ் மினி எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் மாருதி இக்னிஸ் எஸ்யூவி ரூ. 4.59 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷ்களுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்சுடனும் கிடைக்கின்றது. 2438மிமீ வீல்பேஸ் பெற்று தாரளமான இடவசதியுடன் தொடுதிரை ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் ஆதரவுடன் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே , ரிவர்ஸ் கேமரா , பார்க்கிங் சென்சார்கள் , இருவண்ண கலவையில் மூன்று விதமான இன்டிரியர் டேஸ்போர்டு , புதிய ஸ்டீயரிங் வீல் போன்றவை பெற்றுள்ளது. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 83 ஹெச்பி பவருடன் , 113 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close