சேவைக் கட்டணம் ரத்து; ரூ.50 கோடி இழப்பு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் பயன்படுகிறது. ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐஆர்சிடிசி-க்கு ரூபாய் 50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில், ஐஆர்சிடிசிக்கு புக்கிங் சேவைக் கட்டணம் மூலம் 516 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ரயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ஒரு நாளைக்கு 5.75 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close