வாட்ஸ்ஆப் வழக்கு அதிரடியாக தள்ளுபடி

  mayuran   | Last Modified : 16 Jan, 2017 09:24 pm
கடந்த ஆண்டு வாட்ஸ்ஆப்-பினை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில், வாட்ஸ்அப் தகவல்களை பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், வாட்ஸ்ஆப் தகவல்களை பேஸ்புக் நிர்வாகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநலவழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.எஸ்.கெஹர், "வாட்ஸ் ஆப் ஒரு இலவச சேவை. வேண்டுமானால் வைத்து கொள்ளுங்கள், வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். தகவல்களை பகிர்வது அவரவர் விருப்பம்" என்று தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close