புதிய நோக்கியா போனுக்கு 10 லட்சம் முன்பதிவுகள்

  shriram   | Last Modified : 17 Jan, 2017 07:22 pm
நோக்கியா நிறுவனம் நீண்ட காலத்துக்கு பின் மீண்டும் மார்க்கெட்டுக்கு வரும் முயற்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது நோக்கியா 6 ஸ்மார்ட்போன். இந்த மொபைல் தற்போது சீனாவில் மட்டும் விற்பனையாகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இணையதளத்தில் ஃபிளாஷ் சேல் மூலம் மொத்தமாக விற்பனை ஆகவுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக முன்பதிவு வசதி துவங்கப்பட்டது. இதில் முதல் நாளில் மட்டும் 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். தற்போது 10 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது நோக்கியா. JD.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஆனாலும், வெளிநாட்டுக்கு டெலிவரி செய்யும் வசதி இல்லாததால், மற்ற நாட்டில் உள்ள நோக்கியா பிரியர்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 16 மெகாபிக்ஸல் பின் கேமரா, 8 மெகாபிக்ஸல் முன் கேமரா, 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், மற்றும் 3000 mAh பேட்டரி கொண்டுள்ள இதன் விலை வெறும் 17,000 ரூபாய் தான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close