ஜியோ சிம்முடன் வெளிவந்துள்ள மைக்ரோமேக்ஸ் Vdeo 3 மற்றும் Vdeo 4

Last Modified : 19 Jan, 2017 09:20 am

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் "Vdeo 3" மற்றும் "Vdeo 4" எனும் இரண்டு மொபைல்களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தி உள்ளது. 4 ஜி ரக போன்களான இவை ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுடன் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் கூகுளின் டுயோ செயலியும் இதில் உள்ளடங்கி உள்ளது. 5 இன்ச் தொடுதிரை கொண்ட Vdeo 3-ல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP ரியர் கேமரா, 2 MP ப்ரண்ட் கேமரா, 2000mAh பேட்டரி போன்றவற்றை உள்ளது. இதன் விலை 5,749 ரூபாயாகும். இதே போல் Vdeo 4 போனில் 5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 1ஜிபி RAM, 8ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32 ஜிபி மெமரி கார்ட் ஸ்டோரேஜ், 8 MP ரியர் கேமரா, 2 MP ப்ரண்ட் கேமரா, 4000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் அடங்கி உள்ளன. இதன் விலை 6,249 ரூபாயாகும். மேலும் இரு போன்களிலும் 4G VoLTE, Wi-Fi, Bluetooth போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

Advertisement:
[X] Close