வங்கிக் கணக்குகளை எப்படி கண்காணிக்கிறது வருமான வரித்துறை??

  gobinath   | Last Modified : 20 Jan, 2017 01:40 pm
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட , மக்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு அதிகப்படியான அபராத தொகையும், வரியும் வசூலிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்தது. இது ஒரு புறம் இருக்க, நமது வங்கி கணக்கில் நாம் செலுத்தும் தொகை தொடர்பான விபரங்களை எவ்வாறு வருமான வரித்துறை கண்காணிக்கிறது தெரியுமா? கீழே படியுங்கள்.. நடப்பு நிதியாண்டில், ஒருவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் 10 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தால், அது தொடர்பான விபரத்தை சம்பந்தப்பட்ட வங்கி வருமான வரித்துறைக்கு தெரியப் படுத்த வேண்டும். (இதில், நடப்பு கணக்கு மற்றும் நிலையான வைப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அடங்காது ) நடப்பு நிதியாண்டில் ஒருவர் ரூ 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் நிலையான வைப்பு கணக்கு தொடங்கினாலோ அல்லது, கணக்கை மேலதிக தொகை கொண்டு புதுப்பித்தாலோ அது தொடர்பாகவும் தெரியப் படுத்த வேண்டும். ரூ 1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்ட்டுக்கான தொகை செலுத்தப்பட்டாலோ, அல்லது, ரூ 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை கிரெடிட் கார்ட்டுக்கான சந்தாக் கட்டணமாக செலுத்தப்பட்டிருந்தாலோ அது தொடர்பாகவும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். நவ.9 ஆம் தேதியில் இருந்து டிச.30 ஆம் தேதி வரை ஒருவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் ரூ 2.5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்திருந்தால், அதுவும் தெரிவிக்கப்பட வேண்டும். நடப்பு நிதியாண்டில், ரூ 30 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையில் சொத்து வாங்கியிருந்தாலோ, அல்லது விற்றிருந்தாலோ அது தொடர்பாகவும் வருமான வரித்துறைக்கு தெரியப் படுத்த வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close