இந்திய அரசிடம் ஆப்பிள் போடும் கண்டிஷன்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக பல செய்திகள் சமீபத்தில் வெளிவந்தன. வெகு நாட்களாக இந்திய அரசிடம் ஆப்பிள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தற்போது தங்களுக்கு தேவையான சலுகைகளை குறித்து ஒரு லிஸ்ட் போட்டு மத்திய அரசிடம் அவர்கள் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த லிஸ்டில் முக்கிய அம்மசமாக மொபைல் போன்களுக்கான பழைய மற்றும் புதிய பாகங்களை இறக்குமதி செய்ய, 15 வருடங்களுக்கு வரி விலக்கு கேட்கிறார்களாம். அவர்கள் துவங்க திட்டமிட்டுள்ள தொழிற்சாலை, உற்பத்தி செய்யும் திறன் கொண்டது அல்ல; பாகங்களை இணைக்கும் தொழிற்சாலை மட்டும் தான். தற்போது இந்திய அரசின் விதிப்படி ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் 30% பாகங்களை இந்தியாவில் இருந்து தான் வாங்க வேண்டும். ஆனால், புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க இதை 3 வருடங்களுக்கு தளர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக அவர்கள் கேட்கும் மற்ற கோரிக்கைகளை அரசு ஒப்புக்கொண்டால், இங்கு தொழிற்சாலை வைத்துள்ள சாம்சங் போன்ற மற்ற பெரிய நிறுவனங்களும் இதே சலுகைகளை கேட்க வாய்ப்புள்ளது. எனவே இந்த மாதம் 25ஆம் தேதி ஆப்பிள் அதிகாரிகளுடன் நடக்கும் சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். மேலும், டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு அந்நிறுவனத்தை அமெரிக்காவில் புதிய தொழிற்சாலைகளை திறக்க வைக்க முயற்சிகள் எடுக்கும் என்பதனால் விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close