பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதில் இருந்து, ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட மக்களை பல வழிகளில் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பல ஆப்களை அறிமுகம் செய்தது. அந்த வகையில் தற்போது BSNL மற்றும் SBI இணைந்து 'Mobicash' எனும் புதிய ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் சாதாரண பாமர மக்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதாக, சென்னை BSNL வட்ட பொதுமேலாளர் கலாவதி மற்றும் SBI பொதுமேலாளர் இந்து சேகர் ஆகியோர் தெரிவித்தனர்.