பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வணிகத்தை இழந்த திரிபுரா வங்கி

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
திரிபுரா மாநில கூட்டுறவு வங்கி தனது 60ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடியது. அப்போது நடைபெற்ற விழாவில் பேசிய அதன் நிர்வாக இயக்குனர் ஸ்வாபன் குமார் சகா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக செல்லாக்காசு என அறிவிக்கப்பட்ட 135 கோடி ருபாய் பெறுமதியான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தங்கள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், நடப்பு நிதியாண்டில் தங்கள் கடன் வைப்பு விகிதம் 57 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக அது 52 சதவீதமாக குறைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார். மேலும், கடந்த நிதியாண்டில் தங்கள் நிகர லாபம் 20.56 கோடி ரூபாயாக இருந்ததாகவும், நடப்பு நிதியாண்டில் அதை 22 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். அத்துடன், 63 கிளைகளை கொண்ட தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 9,85,938 வாடிக்கையாளர்களுக்கு தங்கள் நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close