ஒரு வழியாக பிரச்சனையை கண்டுபிடித்தது சாம்சங்!! பேட்டரி தான் காரணமாம்

  shriram   | Last Modified : 23 Jan, 2017 02:12 pm

உலகின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான சாம்சங் சமீப காலமாக கடும் சவால்களை சந்தித்து வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்நிறுவனத்தின் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன் வாங்கிய நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் அது தீப்பிடித்து எரிந்து விடுவதாகவும், வெடிப்பதாகவும் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கு பேட்டரி தான் காரணம் என கூறி, வேறு பேட்டரியை சாம்சங் மாற்றி கொடுத்தது. ஆனால் அதுவும் தீ பிடிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறவே, ஒரு நிலையில் அனைத்து போன்களையும் பின்வாங்கும் நிலைக்கு சாம்சங் வந்தது. இதனால் அந்நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இது போதாதென்று சாம்சங்கின் தாய்நாடான தென் கொரியாவில், ஊழல் வழக்கில் சிக்கிய அதிபருக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சாம்சங் தலைவர் மீது விசாரணை நடந்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கேலக்சி நோட் 7ல் ஏற்பட்ட பிரச்சனை குறித்து ஒரு ஆய்வுக்குழு ஏற்படுத்தி ஒரு வழியாக எதனால் தீ பற்றியது என்பதை கண்டுபிடித்து விட்டனர். பேட்டரி தான் காரணமாம். வெடித்த அந்த பேட்டரிகளை வேறு இரண்டு நிறுவனங்கள் மூலம் தாங்கள் பெற்றதாகவும், ஆனாலும், இதற்கு தாங்கள் பொறுப்பேற்பதாகவும் சாம்சங் கூறியது. அந்த நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டபோது, "அது சரியாக இருக்காது?" என சாம்சங் மறுத்தது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close