இரண்டு பின்பக்க கேமரா கொண்ட Honor 6X ஸ்மார்ட்போன்

Last Modified : 26 Jan, 2017 07:48 am
Huawei நிறுவனம் Honor 6X எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. 3GB RAM + 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4GB RAM + 64G இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரு ஸ்டோரேஜ் ரகங்களில் இந்த மொபைல் உருவாக்கப் பட்டுள்ளது. தங்கம், சாம்பல் மற்றும் சில்வர் நிற பின்பக்கங்களை கொண்ட இது அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில், 5.5 இன்ச் தொடுதிரை, 655 octa-core SoC, EMUI 4.1 OS உடன் கூடிய ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 128 ஜிபி மெமரி கார்டு ஸ்டோரேஜ், ஹைபிரிட் டூயல் சிம், 12 MP மற்றும் 2 MP திறன் கொண்ட இரண்டு பின்பக்க கேமராக்கள், 8 MP திறன் கொண்ட முன்பக்க கேமரா, 3340mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் 4G VoLTE, Bluetooth 4.1, Wi-Fi 802.11 b/g/n, GPS/ A-GPS போன்றவையும் உள்ளன. இதன் பின்பக்கத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் பொருத்தப் பட்டுள்ளது. 3 ஜிபி RAM கொண்ட மொபைலின் விலை 12,999 ரூபாயாகவும், 4 ஜிபி RAM கொண்ட மொபைலின் விலை 15,999 ரூபாயாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அறிமுக சலுகையாக அமேசானில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 10% கேஷ்பேக் அளிக்கப் படும். அதேபோல் குறிப்பிட்ட ஏர்டெல் ரீசார்ஜ்களுக்கு 14 ஜிபி இலவச டேட்டா மற்றும் 300 ரூபாய் விலையுள்ள kindel புத்தகங்களுக்கு 80% வரை தள்ளுபடி அளிக்கப் படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close