2 லட்சத்தைத் தாண்டிய 'Vitara Brezza' கார் புக்கிங்

  mayuran   | Last Modified : 27 Jan, 2017 11:00 am

மாருதி சுஸூகி 'Vitara Brezza', கடந்த மார்ச் மாதம் 2016 ஆண்டு அறிமுகமாகி, சராசரியாக மாதம் ஒன்றுக்கு 9,000 கார்கள் விற்பனையானது. கார் அறிமுகமாகி இன்னும் ஒரு வருடமே ஆகாத நிலையில், இதன் புக்கிங் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது என மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது. மேலும் வெயிட்டிங் பிரீயட்டும், தற்போது 4 முதல் 6 மாதங்கள் என்ற அளவில் இருக்கிறது. அதிலும் டூயல் டோன் ஃபினிஷில் வரக்கூடிய டாப் வேரியன்ட்டான Zdi+ க்கு, மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதாக மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையின் சிறந்த விருதுகளைப் பெற்றிருக்கும் இது, Ford Ecosport, Mahindra TUV 300 & Nuvosport ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.