விரைவில் ஐடியா - வோடபோன் டீல்??

  shriram   | Last Modified : 30 Jan, 2017 10:52 am

இலவச போன் கால், மெசேஜ், டேட்டா என அதிரடியாக மார்கெட்டுக்குள் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ, தற்போது 10 கோடி வாடிக்கையாளர்களை நோக்கி ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்டெல் நிறுவனம், ஜியோவுடனான போட்டியில் அதிரடி ஆஃபர்களை கொடுத்து மக்களை கவர்ந்து வருகிறது. இந்த இரண்டு மெகா நிறுவனங்களுக்கும் ஈடுகொடுக்க, அடுத்த இரண்டு பெரிய நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா இணைய திட்டமிட்டு வருகின்றனர். இரண்டு நிறுவனங்களும் மொத்தமாக 39 கோடி வாடிக்கையாளர்களை தங்கள் வசம் கொண்டுள்ளன. ஏர்டெல் நிறுவனத்திடம் 27 கோடி வாடிக்கையாளர்களே உள்ளனர். 40% மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ள இந்த மெகா-மெர்ஜர் தற்போது பேச்சுவார்த்தை நிலையில் உள்ளது. இனி ஜியோ மீண்டும் சர்ப்ரைஸ் இலவச அட்டாக் கொடுத்தால் அதை தாங்கும் வலிமை இரண்டு நிறுவனங்களும் சேர்ந்தால் தான் உண்டு என்கிற நிலைமையில், இந்த டீல் இன்றியமையாதது என்கின்றனர் நிபுணர்கள்.

Advertisement:
[X] Close