ATM களில் பணம் எடுக்க வரம்பு இல்லை

  mayuran   | Last Modified : 30 Jan, 2017 05:46 pm

மத்திய அரசால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெற்றதை அடுத்து நாட்டில் மக்களிடையே பணத் தட்டுப்பாடு நிலவியது. தொடர்ந்து ATM இல் பணம் எடுக்க, அதிக பட்சமாக 2000 ரூபாய் என மட்டுப்படுத்தப் பட்டிருந்தது. பின் 4500 ரூபாயாக அதிகரிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ATM களில் பணம் எடுக்க வரம்பு இல்லை என ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதோடு நடப்புக் கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளதாகவும், சேமிப்புக் கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 8 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த கட்டுப்பாடுகள் நடப்புக் கணக்கில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
[X] Close