ஆண்ட்ராய்டு நுகாட்: Asus ஜென்போன் 3S Max

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
Asus நிறுவனம் தங்களது ஜென்பொன் வரிசையில் அடுத்த படைப்பை வெளியிட்டுள்ளனர். ஜென்போன் 3எஸ் மேக்ஸ் என்ற இந்த ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. பார்ப்பதற்கு ஐபோன் மற்றும் சாம்சங் போன்களை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. 3 ஜிபி RAM, 1.5 Ghz ஆக்டாகோர் ப்ராஸசர் மட்டுமல்லாமல், இதன் மிகப்பெரிய சிறப்பம்சமே இதன் 5000 mAh பேட்டரி தான். 2 நாட்கள் சார்ஜ் நிற்பதோடு, இதில் உள்ள ரிவர்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தால், இந்த போனை வைத்து நம்முடைய மற்ற சிறிய கருவிகளை சார்ஜ் செய்து கொள்ளலாம். ரெட்மி நோட் 4 மொபைலுக்கு போட்டியாக இது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. டிஸ்பிளே, ப்ராசஸர் போன்ற இடங்களில் பின்தங்கினாலும், கேமரா, பேட்டரி போன்ற முக்கியமான இடங்களில் ஜென்போன் 3எஸ் மேக்ஸ் அதிக புள்ளிகள் பெறுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு நுகாட் கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன் இது மட்டும் தான். இந்தியாவில் இதன் விலை இன்னும் வெளியாகவில்லை. 12-14 ஆயிரம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close