ஐபோன் 7 மூலம் சாதனை படைத்துள்ளது ஆப்பிள்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தங்களது நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிகமான வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இதற்கு பெரும் பங்காக சமீபத்தில் வெளியான ஐபோன் 7னின் வெற்றியை அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த காலாண்டில், 5.3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக ஆப்பிள் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட இது சுமார் 17,000 கோடி ரூபாய் அதிகம். 3.6 லட்சம் கோடி ரூபாய் ஐபோன் மூலமாகவும், 48,000 கோடி ரூபாய் மேக் கம்ப்யூட்டர்கள் மூலமாகவும், 37 ஆயிரம் கோடி ரூபாய் ஐபேட் மூலமாகவும், 27 ஆயிரம் கோடி ரூபாய் மற்ற பொருட்கள் மூலமாகவும் கிடைத்துள்ளது என்கிறது ஆப்பிள். இதில் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் கிடைத்த வருவாய் 64% ஆகும். மொத்தமாக 7.83 கோடி ஐபோன்கள் உலகம் முழுவதும் விற்பனை ஆகியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. "இதுவரை இல்லாத அளவு அதிகமான ஐபோன்களை விற்பனை செய்து, ஆப்பிள் வரலாற்றிலேயே அதிகமான வருவாய் எடுத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், ஆப் ஸ்டோர் மூலமாக கடந்த வருடத்தை விட கணிசமான அளவு வருவாய் கிடைத்துள்ளது," என ஆப்பிள் தலைவர் டிம் குக் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close