3400 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க பேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவு!!

  shriram   | Last Modified : 02 Feb, 2017 02:33 pm
பேஸ்புக்கின் இணை நிறுவனமான ஆக்குலஸ், ஜெனிமேக்ஸ் என்ற நிறுவனத்திற்கு சுமார் 3400 கோடி ரூபாய் மதிப்பில் நஷ்டஈடு வழங்க ஒரு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. VR தொழில்நுட்பங்கள் கொண்ட கருவிகளை வடிவமைக்கும் ஆக்குலஸ் நிறுவனத்தை பேஸ்புக் 2014ஆம் ஆண்டு சுமார் 13.5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியது. அதன்பின், தங்களது தொழில்நுட்பத்தை ஆக்குலஸ் திருடிவிட்டதாக ஜெனிமேக்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது. பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து கடத்த வாரம் பேட்டியளித்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அறிவுசார் சொத்து திருட்டு, மற்றும் ரகசிய உடன்படிக்கை மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக ஆக்குலஸ்-க்கு எதிராக தீர்ப்பளித்தது. ஜெனிமேக்ஸ் நிறுவனம் நஷ்டஈடாக, சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாயளவில் கேட்டிருந்தது. ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு 3,400 கோடி ரூபாய் பேஸ்புக் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. "இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும், மேல் முறையீடு செய்வோம்," என்று ஜெனிமேக்ஸ் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close