ஜாலி..ஜாலி..! இனி பிடிக்கலைனா கூட 'டேட்டிங்' போகலாம்..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நவ நாகரீக உலகத்தின் தூண்களாகிய 'மாடர்ன் யூத்ஸ்', இனிமே உங்களுடைய 'டேட்டிங்' - ல மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்கே வராது. ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான விஷயங்கள் புடிச்சு 'டேட்டிங்' போன பிறகு தான் தெரியும், எது..எதுலாம் பிடிக்காதுன்னு. அங்க ஆரம்பிக்கிற பிரச்சினை அடுத்த டேட்டிங்க்கான கனவையே அழிச்சுடும். இனிமே, அந்த பிரச்சினை வராது, ஏன்னா பிடிக்காத விஷயங்களை ஷேர் பண்ணிக்கிட்டு, தெளிவானதுக்கு அப்புறம் ஊர் சுத்த கெளம்புறதுக்காக புது ஆப் வரப் போகுது. 'Hater' என்ற புதிய டேட்டிங் ஆப், வரும் 8-ம் தேதி அறிமுகமாகிறது. எல்லா டேட்டிங் ஆப்களும் இருவருக்கும் ஒரே விஷயங்கள் பிடித்திருக்கிறதா? என கணக்கிட்டு மேட்ச்களைக் காட்டும். ஆனால், இந்த ஹேட்டர், இருவருக்கும் பிடிக்காத விஷயங்கள் ஒன்றாக இருந்தால் ஒருவருக்கொருவரை அறிமுகப்படுத்துகிறது. இருவருக்கும் பிடித்த விஷயங்கள் ஒன்றாக இருந்தால், அவர்களுக்குள் நல்ல பிணைப்பு இருக்கும் என்பது பொதுவான சைக்காலஜி. ஆனால், இருவருக்கும் பிடிக்காத விஷயங்கள் ஒன்றாக இருந்தாலும் நல்ல புரிதல் ஏற்படும் என சொல்கிறார் இந்த அப்ளிகேஷனை உருவாக்கிய பிரெண்டன் ஆல்பர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close