Paytm மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பிரதமர் மோடியின் படத்தை பயன்படுத்தி Paytm மற்றும் ஜியோ நிறுவனங்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தன. ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட போது, பிரதமரின் படத்தை நாளிதழில் முழுபக்கத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டது. அதேபோல் பிரதமர் பணத்தினை வாபஸ் பெற்ற போது Paytm நிறுவனமும் இதே மாதிரியான விளம்பரத்தினை கொடுத்தது. இதற்கு அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வாங்கப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு Paytm மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close