உலகிலேயே மிக நீண்ட விமான சேவை!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் உலகத்திலேயே மிகவும் நீளமான பயணிகள் விமான சேவையை இன்று அறிமுகப்படுத்தியது. கத்தார் தலைநகரம் தோஹாவிலிருந்து நியூஸிலாந்தின் ஆக்லாந்து வரை செல்லும் இந்த சேவை, 16 மணிநேரங்கள் 20 நிமிடங்கள் நீளமானது. இந்த தடத்தில் முதல்முறையாக செல்லும் QR920 என்ற போயிங் 777 விமானம், 8 நிமிடங்கள் முன்னதாகவே இன்று கிளம்பியது. 14,535 கிமீ தூரத்தை கடக்கும்போது 10 நேர மண்டலங்களை இந்த விமானம் கடக்கின்றது. ஆக்லாந்தில் இருந்து திரும்பும் இதே விமானம் வானிலை காரணமாக வந்து சேர 17 மணிநேரங்கள் 30 நிமிடங்கள் ஆகுமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close