வெறும் 20 ஆயிரம் ரூபாயில் மின்சார ஸ்கூட்டர்!!

  shriram   | Last Modified : 06 Feb, 2017 03:44 pm

ஹீரோ நிறுவனம் புதிதாக ஃபிளாஷ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. 250வாட் மின் சக்தியில் இயங்கும் இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால், 65 கிமீ வரை பயணிக்கலாம். எளிதாக பயன்படுத்தும் வகையில் வெறும் 87 கிலோ எடை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ தான். இதை ஓட்டுவதற்கு லைசென்ஸ் மற்றும் சாலை வரி தேவையில்லை. குறைந்த தூர பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை வெறும் 19,990 தான்!!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close