Aqua ரகத்தில் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப் படுத்தியது இன்டெக்ஸ்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்டெக்ஸ் நிறுவனம் புதிதாக Aqua 4.0, Aqua Crystal, மற்றும் Aqua Supreme+ எனும் மூன்று 4G ரக போன்களை அறிமுகப் படுத்தி உள்ளது. இவற்றின் விலை முறையே 4,199, 6,990, மற்றும் 9,490 ரூபாயாகும். Aqua 4.0 4 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், க்வாட்-கோர் ப்ராசெஸ்ஸார், 512 MB RAM, 2MP பின்பக்க கேமரா, 0.3 MP முன்பக்க கேமரா, 4ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் சிம், 4G VoLTE, 1500mAh பேட்டரி போன்ற அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளன. இதன் விலை ரூபாய் 4,199 மட்டுமே. Aqua Crystal இந்த ஸ்மார்ட்போனில் 5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், க்வாட்-கோர் ப்ராசெஸ்ஸார், 1ஜிபி RAM, 8 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 2000mAh, டூயல் சிம் (மைக்ரோ + நேனோ), 4G VoLTE ஆகியவற்றுடன் LFTY, Tap & Buy, MiFon Security, மற்றும் Vistoso போன்ற செயலிகள் இதில் உள்ளடக்கமாகவே உள்ளன. இதன் விலை 6,990 ரூபாயாகும். Aqua Supreme+ ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட Indus OS-ல் இயங்கும் இந்த மொபைலில் 5 இன்ச் தொடுதிரை, க்வாட்-கோர் ப்ராசெஸ்ஸார், 2ஜிபி RAM, 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, டூயல் சிம், 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4G VoLTE, 3000mAh பேட்டரி போன்றவை இதில் உள்ளன. இவற்றுடன் Tap & Buy, MiFon Security, மற்றும் Vistoso போன்ற செயலிகளும் இதில் அடங்கி உள்ளன. இதன் விலை ரூ.9,490

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.